உள்ளூர் செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1½ கோடி உண்டியல் வசூல்

Published On 2022-07-19 07:06 GMT   |   Update On 2022-07-19 07:06 GMT
  • திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.
  • கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அவர்கள் மலைக்கோவிலில் உள்ள மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 284, தங்கம் 1055 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 425 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News