உள்ளூர் செய்திகள்

ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் சாலை-குளம் தூர்வாரும் பணிகள்- அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-29 11:59 IST   |   Update On 2022-06-29 11:59:00 IST
  • அயனம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
  • பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

பூந்தமல்லி:

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ராஜாங்குப்பம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்திரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News