உள்ளூர் செய்திகள்

50 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-11-11 15:35 IST   |   Update On 2023-11-11 15:35:00 IST
  • தாமதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கணடறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்காலிக பட்டச் சான்றிதழை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் சிலரின் அலட்சியத்தால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தாமதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கணடறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்காலிக பட்டச் சான்றிதழ் இல்லாமல், தனித்தனியான மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள், அடுத்த 6 மாதங்களில் தற்காலிக பட்டச் சான்றிதழை தாக்கல் செய்யாவிட்டால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளன.

மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்காலிக பட்டச் சான்றிதழை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News