நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர் மீது தனியார் கல்லூரி பேராசிரியை புகார்
- கடந்த 2015-ம் ஆண்டு பிரவீன்குமாருக்கும், பூங்கொடிக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- நிச்சயம் செய்து விட்டு 8 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் பூங்கொடியை, பிரவீன்குமார் ஏமாற்றிய சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது26). இவர் எலத்தகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (30).
இவரும், பூங்கொடியும் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு பிரவீன்குமாருக்கும், பூங்கொடிக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு இருவரும் லிவிங்டூ-கெதர் பாணியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிச்சயம் செய்து 8 வருடங்கள் ஆகியும் திருமணம் செய்யாமல் பிரவீன்குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து பூங்கொடி அவரிடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பூங்கொடி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயம் செய்து விட்டு 8 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் பூங்கொடியை, பிரவீன்குமார் ஏமாற்றிய சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.