உள்ளூர் செய்திகள்

மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை

Published On 2023-09-26 09:32 GMT   |   Update On 2023-09-26 09:32 GMT
  • பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மதுரை:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கே.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). இவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்து வந்துள்ளது.

கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இவரும், இவரது தந்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் அவரது தந்தைக்கு ஜாமின் கிடைத்து வெளியே சென்றார். ஆனால் அஜித்குமாருக்கு ஜாமின் கிடைக்காததால் தொடர்ந்து அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கஞ்சா பழக்கத்தற்கு அடிமையாகி இருந்ததால் அவர் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று வழக்கின் வாய்தாவிற்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மாலை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இதற்கிடையே சில மாதங்களாக தனக்கு தானே பேசிக்கொள்வதுமாகவும் இருந்துள்ளார்.

இதனால் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக மனநோயாளிகள் சிகிச்சை பெறுபவர்களுக்கான தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம் போல் உணவு அருந்தி விட்டு வந்தவர் திடீரென மின்விசிறியில் துண்டை மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட சிறைக்காவலர்களும், சக கைதிகளும் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ரெயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News