உள்ளூர் செய்திகள்
கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜராக பிரேமலதா விஜயகாந்த் வந்த காட்சி.

தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விடுதலை- கோபிசெட்டிபாளையம் கோர்ட் உத்தரவு

Published On 2022-07-18 12:47 IST   |   Update On 2022-07-18 12:47:00 IST
  • அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
  • இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

கோபி:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ்குமார் என்பவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அ.தி.மு.க.வில் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக அப்போது அ.தி.மு.க. கோபி நகர செயலாளராக இருந்த சையதுபுடான்சா என்பவர் கோபிசெட்டிபாளையம் ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் இன்று காலை ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

Tags:    

Similar News