உள்ளூர் செய்திகள்
பூந்தமல்லி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
- ஆகாஷ் திருமணம் கிராமத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டார்.
- போலீசார் ஆகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் ஆகாஷ் திருமணம் கிராமத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.