உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே குட்கா விற்ற 2 பேர் கைது

Published On 2022-09-07 17:26 IST   |   Update On 2022-09-07 17:26:00 IST
கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த மாதவரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உள்பட போலீசார் மாதவரம் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மாதவரம் கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (வயது 34) என்பவரது கடையில் 7½ கிலோ குட்காவும், இதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் மாரியப்பன் (45) என்பவரது கடையில் 19 கிலோ குட்கா பொருட்களையும், சவுதம்புயி (38) என்பவரிடம் 400 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து 26½ கிலோ குட்கா, 400 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ராகேஷ், மாரியப்பன், கவுதம்புயி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News