உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் சாலையில் அரசியல் கட்சி பேனர்- அச்சக உரிமையாளர் உள்பட 72 பேர் மீது வழக்கு

Published On 2023-02-09 15:55 IST   |   Update On 2023-02-09 15:55:00 IST
  • எவ்வித அனுமதியும் பெறாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் பேனர்களை வைத்தனர்.
  • பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் இருந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசியல் கட்சியின் விழா நடைபெறுகிறது.

இதற்காக எவ்வித அனுமதியும் பெறாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் பேனர்களை வைத்தனர்.

இது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மேலும் சாலையை மறித்தும் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி எவ்வித அனுமதியும் இல்லாமல் விளம்பர பேனர் அச்சடித்த 7 அச்சக உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

Similar News