உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்: கணவன்-மனைவி மீது வழக்கு

Published On 2022-08-21 12:53 IST   |   Update On 2022-08-21 12:53:00 IST
  • செல்வகுமாரும் சகுந்தலாவும் மாணவி குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மாணவியின் தாயார் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான செல்வகுமார் என்ற வாலிபர் மாணவி குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை வைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாணவியின் தாயார் செல்வகுமாரின் மனைவி சகுந்தலாவை சந்தித்து கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வகுமாரும் சகுந்தலாவும் மாணவி குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மாணவியின் தாயார் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News