உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான் மீட்பு
- நாய்கள் புள்ளி மானை விரட்டி விரட்டி கடித்தன.
- மானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் புதுப்பட்டி நம் பக்கிங்காம் பகுதி தைல மர காட்டுக்குள் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.
இதனை கண்ட 5-க்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளி மானை விரட்டி விரட்டி கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த மான் உயிருக்கு போராடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றினர்.
இதுகுறித்து கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் திருக்கழுகுன்றம் வனத்துறை அதிகாரிகளுடன் விரைந்து வந்து காயத்துடன் இருந்த மானை மீட்டனர்.
அந்த மானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.