உள்ளூர் செய்திகள்
பா.ம.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்டுள்ள காட்சி.
கடலூர் சாவடியில் பா.ம.க. கொடிக்கம்பம் உடைப்பு
- கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
- பா.ம.க. கொடிக்கம்பத்தை உடைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் சாவடியில் சாலை ஓரத்தில் பா.ம.க. கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு இங்கிருந்த கொடி கம்பம் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு சாலையில் விழுந்து கிடந்தது. இதனை பார்த்த பா.ம.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பா.ம.க. கொடிக்கம்பத்தை உடைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ம.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.