உள்ளூர் செய்திகள்

கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-11 07:44 GMT   |   Update On 2022-08-11 07:44 GMT
  • அகச்ரா 11-ம் வகுப்பு பாடத்திட்டம் கடினமாக இருப்பதாக தாய் கலைவாணியிடம் கூறி வந்ததாக தெரிகிறது.
  • சரியாக படிக்க முடியாததால் மனவேதனை அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி. இவர் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் அக்சரா (வயது 15) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கணவரை பிரிந்த கலைவாணி மகளுடன் தங்கி இருந்தார். நேற்று இரவு அம்பத்தூரில் உள்ள சகோதரர் வீட்டுக்கு கலைவாணி சென்றார். வீட்டில் அக்சரா மட்டும் தனியாக இருந்தார்.

இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருப்பதை கண்டு கலைவாணி சந்தேகம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்ற போது துப்பட்டாவால் மகள் அக்சரா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்சரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

அகச்ரா 11-ம் வகுப்பு பாடத்திட்டம் கடினமாக இருப்பதாக தாய் கலைவாணியிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

எனவே சரியாக படிக்க முடியாததால் மனவேதனை அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News