உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் போலி தரிசன டிக்கெட் விற்ற 3 பேர் கைது

Published On 2023-08-23 15:51 IST   |   Update On 2023-08-23 15:51:00 IST
  • ஆடித்திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்கள் ரூ.100 தரிசன டிக்கெட்டை போலியாக அச்சடித்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
  • கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு ரூ.50, ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு சிலர் போலியாக தரிசன டிக்கெட் வழங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஒப்பந்த பணியாளரான அரியப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன், பெரியபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த வினோத், வடமதுரை கிராமத்தை சேர்ந்த தினகரன் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆடித்திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்கள் ரூ.100 தரிசன டிக்கெட்டை போலியாக அச்சடித்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News