உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை

Update: 2023-02-08 11:01 GMT
  • கடந்த 6 மாதங்களாக கோபால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
  • வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் புல்லலூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 67). இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்காஞ்சிபுரம்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காஞ்காஞ்சிபுரம்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News