உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: சாலையோரத்தில் இரவு, பகலாக தங்கி தவித்த குடும்பத்தினர்

Published On 2022-06-22 09:55 GMT   |   Update On 2022-06-22 09:55 GMT
  • வீடுகளை இழந்த குடும்பத்தினர் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கினர்.
  • மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த கொடூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் முன்னிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

இதனால் வீடுகளை இழந்த குடும்பத்தினர் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கினர்.

மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் கஸ்தூரி மகேந்திரன் ஆகியோர் சாலையோரம் தங்கி இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கண்ணீருடன் பேசியது அனைவரையும் கலங்க வைத்தது.

Tags:    

Similar News