தண்ணீர் என நினைத்து கழிவறை கிளீனரை மதுவில் கலந்து குடித்த வட மாநில வாலிபர் பலி
- வட மாநில வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஒடிசா மாநிலம் சுனந்தா கிராமத்தை சேர்ந்தவர் பாபு நாயக். கடந்த 5 மாதமாக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் எர்த் மூவர்ஸ் கம்பெனியில் தங்கி லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாபு நாயக்குக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பத்தன்று பாபு நாயக் மது அருந்தியுள்ளார். பின்னர் திடீரென வயிறு வலிப்பதாக கூறி அலறினார். அக்கம் பக்கத்தினர் இது குறித்த அவரிடம் கேட்டபோது தான் மது அருந்திய போது அருகில் இருந்த கழிவறை கிளீனரை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக பாபு நாயக்கை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபு நாயக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.