உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் நகருக்குள் 1.31கோடி செலவில் புதிய சாலைகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி
- சாலைகள் சேதமடைந்து, அதில் நடந்து செல்லும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் சிறமப்பட்டு வந்தனர்.
- தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 1.31கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் ஒத்தவாடை குறுக்கு தெரு, வேதாசலம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து, அதில் நடந்து செல்லும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் சிறமப்பட்டு வந்தனர். இதையடுத்து பழைய சாலையை பெயர்த்து எடுத்து விட்டு, புதிய சாலை அமைக்க, தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 1.31கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு, பழைய சாலைகளை பொக்லைன் வைத்து பெயத்தெடுக்கும் பணி துவங்கியது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார், பூபதி, சீனிவாசன், மற்றும் கட்சி பிரமுகர்கள் ரமேஸ், முருகன், கண்ணதாசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.