உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்

Published On 2022-09-18 15:53 IST   |   Update On 2022-09-18 15:53:00 IST
  • மீஞ்சூர் அடுத்த நாலூர், ஞாயிறு ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்.
  • பட்டா சிட்டா முதியோர் உதவித்தொகை ஆதார் எண் இணைப்பு இதர மனுக்கள் உள்ளிட்ட 180 மனுக்கள் பெறப்பட்டன.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த நாலூர், ஞாயிறு ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் ஆர்.டி.ஓ. காயத்ரி, தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பட்டா சிட்டா முதியோர் உதவித்தொகை ஆதார் எண் இணைப்பு இதர மனுக்கள் உள்ளிட்ட 180 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. இதில், மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், சேர்மன் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், தலைவர் சுஜாதா ரகு, துணைத்தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News