உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-02-16 18:15 IST   |   Update On 2024-02-16 18:15:00 IST
  • ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
  • முன்னாள் வட்டார தலைவர்‌ சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயோ கழிப்பறை உபயோகிக்க முடியாமல் இருப்பதை மக்கள் சுட்டி காட்ட உடனடியாக குழித்துறை நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தின குமார், முன்னாள் வட்டார தலைவர் சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News