உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் கொலை: கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-07-16 14:37 IST   |   Update On 2023-07-16 14:37:00 IST
  • கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
  • 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வண்டலூர்:

மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பா.ம.க.வை சேர்ந்த இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க மாவட்ட தலைவராக இருந்தார்.

கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் காளிதாஸ், மறைமலைநகரில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மேலும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்தார். 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில், முக்கிய குற்றவாளிகளான மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சபரி என்ற சபரிநாதன், வெங்கடேஷ், பார்த்திபன், சிங்க பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியம் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினார்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சபரி உள்ளிட்ட 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News