உள்ளூர் செய்திகள்
மணவாளநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
- வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மணவாளநகர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கபிலர் நகரை சேர்ந்தவர் வீரசேகரன் (வயது 25). இவர் கடந்த 23-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆற்காடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 4½ பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரசேகரன் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.