உள்ளூர் செய்திகள்

மாம்பாக்கத்தில் நாளை மின்தடை

Published On 2022-09-04 19:05 IST   |   Update On 2022-09-04 19:25:00 IST
  • மாம்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

திருப்போரூர்:

மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மாம்பாக்கம் ஜோதி நகர், பொன்மார் செல்லியம்மன் கோவில் தெரு, வேங்கடமங்கலம், காசா கிராண்டு, மதுரப்பாக்கம், மூலச்சேரி போன்ற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மறைமலைநகர் கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Similar News