உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் செங்கொடி பேரணி- தனியார், அரசுத்துறை தொழிலாளர்கள் பங்கேற்பு

Published On 2022-10-30 16:30 IST   |   Update On 2022-10-30 17:13:00 IST
  • தொழிலாளர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து மாநாட்டு அரங்கம் வரை செங்கொடி ஏந்தி பேரணி நடத்தினர்.
  • டெல்லியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணி.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் 23வது மாநாடு மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள சமூகநல கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மாநாட்டை மாவட்ட தலைவர் சங்கையா தலைமையில், மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

முன்னதாக மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் தேவராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து மாநாட்டு அரங்கம் வரை செங்கொடி ஏந்தி பேரணி நடத்தினர். பேரணியின் போது தொழிலாளர் சட்ட தொகுப்பில் நீக்கப்பட்ட உரிமைகளை மீன்டும் பெறுதல், நிரந்தரம் இல்லாத அரசு தொழிலாளர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்னயம் செய்தல், நகராட்சி, பேரூராட்சி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல், மின்சார திருத்த சட்டத்தை அரசு திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோசமிட்டனர்.

இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் அடுத்து டெல்லியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணி நடத்த போவதாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News