மாமல்லபுரத்தில் குளங்களை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் பனை விதைகளை விதைத்தது
- குளங்களை அழகுபடுத்தி, உறுதியாக்கும் மேம்பாட்டு பணிகளை பேரூராட்சி தொடர்ந்து செய்து வருகிறது.
- வரப்பை உறுதியாக்கும் முயற்சியாக 400க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சோலைப்பொய்கை, வண்ணான்குட்டை குளங்களை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த குளங்களை அழகுபடுத்தி, உறுதியாக்கும் மேம்பாட்டு பணிகளை பேரூராட்சி தொடர்ந்து செய்து வருகிறது.
அழகுபடுத்தும் விதமாக வரப்பின் நடைபாதை ஓரங்களில் சிகப்பு, வெள்ளை, அரளி செடிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பாதாம், வேம்பு, புங்கை, பூவரசு உள்ளிட்ட மரங்களையும் நட்டு வருகின்றனர். வரப்பை உறுதியாக்கும் முயற்சியாக 400க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றினர். ஏற்கனவே இ.சி.ஆர் ரோடு விரிவாக்க திட்டத்திற்காக வேரோடு தோண்டி அகற்றப்பட்ட 5 மரங்களை அப்பகுதியில் நட்டு உயிர் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பனை விதை விதைக்கும் இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.