மதுராந்தகம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
- கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
- கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுராந்தகம்:
மதுராந்தகம் படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் 20-வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் நிறுவனரும் தமிழக சட்டம், நீதித்துறை மற்றும் சிறை துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார்.
முன்னதாக கல்லூரி இயக்குனர் டாக்டர். மீனாட்சி அண்ணாமலை வரவேற்றார். கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் திரைப்பட நடிகரும், பின்னணி பாட கருமான ஜி.வி. பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரிக்கு விடுமுறை எடுக்காது வருகை தந்த மாணவர்கள், கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கல்லூரி டீன் சுப்பாராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.