உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து- 2 பேர் உயிரிழப்பு

Published On 2023-08-19 02:16 GMT   |   Update On 2023-08-19 02:16 GMT
  • விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவரம்:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் இரும்புகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 3 மணிநேரம் போராடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News