திருவொற்றியூரில் தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி- கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பையுடன் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.
- திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 43-வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் உள்ள பூப்பந்தாட்ட திடலில் நேற்று தொடங்கியது. பகல் இரவு போட்டியாக இன்றும் (சனி) நாளையும் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடை பெறும் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை சேர்ந்த 172 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பையுடன் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. முதல் நாள் போட்டியினை திருவெற்றியூர் கே.பி சங்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவ வீ.மெய்ய நாதன், டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல். ஏ., திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அணியில் இருந்து 20 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கே. பி. சங்கர் எம்.எல்.ஏ. சீருடை மற்றும் காலணிகள் வழங்கி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.