உள்ளூர் செய்திகள்

கிராம மக்களின் எதிர்ப்பு தொடரும் நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்

Published On 2023-01-03 14:17 IST   |   Update On 2023-01-03 14:18:00 IST
  • கனரக லாரிகளை சுமார் 3கி.மீ. தூரத்திற்கு சாலையோரமாக அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
  • இரு தரப்பும் பிடிவாதமாக நடத்தி வரும் தொடர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேன்கனிகோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரட்டகிரி கிராமத்தில் உள்ள 7 கல்குவாரி கனரக வாகனங்கள் ஊருக்குள் செல்ல கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிய நிலையில் கிராமத்திற்குள் கல்குவாரி லாரிகள் செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் கிராம மக்கள் லாரிகளை அனுமதிக்க மறுத்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 2,000 பேர் உண்ணாவிரத போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கொரட்டகிரி கிராமத்திற்கு முன்பாக கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களது கனரக லாரிகளை சுமார் 3கி.மீ. தூரத்திற்கு சாலையோரமாக அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

இரு தரப்பும் பிடிவாதமாக நடத்தி வரும் தொடர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News