உள்ளூர் செய்திகள்

கூண்டுக்குள் சிக்கிய கரடி


களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி சிக்கியது

Published On 2023-05-30 10:45 IST   |   Update On 2023-05-30 10:45:00 IST
  • வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
  • கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.

இதுபோல வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி ஒன்று களக்காடு அருகே பெருமாள்குளம் கிராமத்திற்குள் சுற்றி திரிந்தது. இதன் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் பெருமாள் குளம் கிராமத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கூண்டுக்குள் கரடி சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News