ஈரோட்டில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஓட்டல் கடைக்காரர் கைது
- சுபாஷ் கடைக்கு 10 வயது சிறுமி உணவு வாங்க அடிக்கடி வந்துள்ளார்.
- சுபாஷ் பார்வை சிறுமி மீது விழுந்தது.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கடை மேட்டை சேர்ந்தவர் சுபாஷ் (35). அதே பகுதியில் தள்ளுவண்டியில் சைவ, அசைவ உணவு கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு 10 வயது சிறுமி உணவு வாங்க அடிக்கடி வந்துள்ளார். இதனால் சுபாஷ் பார்வை சிறுமி மீது விழுந்தது. சம்பவத்தன்று அந்த சிறுமி கடைக்கு உணவு வாங்க வந்திருந்தார். அப்போது சுபாஷ் சிறுமிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் சுபாஷ் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுபாஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.