இரணியல் அருகே 10 வயது சிறுமியிடம் சில்மிஷம்- போக்சோவில் தொழிலாளி கைது
- ஜெகதீஸ், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று கூறினார்.
- மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்தனர்.
குளச்சல்:
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 31), தொழிலாளி.
இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு 10 வயது சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 9 மணியளவில் சிறுமியின் பாட்டி மற்றும் தாயார் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றனர். இந்த நேரத்தில் சிறுமி தனது பாட்டி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஸ், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு ஜெகதீஸ் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்தனர்.