கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜா-சிவராமனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
- நியமன மாநிலங்களவை உறுப்பினரான, மிகவும் பிரபலமான இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதால் உலகத் தமிழர்களும், இசைப்பிரியர்களும், கலைத் துறையினரும் பெருமை அடைகிறார்கள்.
- பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் உமையாள்புரம் சிவராமனும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. பிரதமரிடம் பட்டம் பெற்ற மாணவர்கள் பெருமைக்குரியவர்கள். குறிப்பாக பிரதமர் இசைத்துறையில் சிறந்து விளங்கும் இளையராஜாவுக்கும், கர்நாடக இசையில் சாதனை செய்த மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.
நியமன மாநிலங்களவை உறுப்பினரான, மிகவும் பிரபலமான இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதால் உலகத் தமிழர்களும், இசைப்பிரியர்களும், கலைத் துறையினரும் பெருமை அடைகிறார்கள். பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் உமையாள்புரம் சிவராமனும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர். இவர்கள் மென்மேலும் பல்வேறு விருதுகள் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.