உள்ளூர் செய்திகள்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
- மத்தூர் ரெயில்வே கேட்ட அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த மத்தூர் ரெயில்வே கேட்ட அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
விசாரணையில் அவர், திருத்தணி அடுத்த பட்டாபி ராமபுரம் பகுதியை சேர்ந்த அபி என்கிற பிரிதிவ்ராஜ் என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.