உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

Published On 2022-09-17 16:00 IST   |   Update On 2022-09-17 16:00:00 IST
  • திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையெடுத்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (24), சுரேந்தர் (26) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுக்குறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர், யாருக்கெல்லாம் விநியோகித்தனர், இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News