உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவி அ.தி.மு.க.வில் ஐக்கியம்- அண்ணாமலை மீது புகார்

Published On 2023-03-22 14:29 IST   |   Update On 2023-03-22 14:29:00 IST
  • வாழ்த்துக்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் என்று அண்ணாமலை கூறினார்.
  • வாழ்த்துக்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை:

தமிழக பா.ஜனதாவில் இருந்து தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் நிர்மல் குமார் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் வெடித்தது. விலகி சென்றவர்கள் மாநில தலைமை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது, 'வாழ்த்துக்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருங்கள், என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவி கங்கா தேவி, தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஜெயலட்சுமி, மதுபாலா, மணி கண்டன், முருகேசன், கிருத்திகா உள்பட சிலர் விலகி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்கள்.

பா.ஜனதாவில் இருந்து விலகியது பற்றி கங்காதேவி கூறியதாவது:-

பா.ஜனதாவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. இது எனக்கு மட்டுமல்ல. மற்ற பெண்களுக்கும் தான். பொறுப்பு தருகிறார்கள். ஏன் பொறுப்பு தந்தார்கள்? ஏன் அதை பிடுங்கினார்கள் என்று எதுவுமே தெரியாது. கட்சிக்குள் நடக்கும் முறைகேடுகள் பற்றி மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் செய்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே விலகினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கங்காதேவி ஏற்கனவே அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்தவர். அங்கிருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News