உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் இன்று கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- கடலின் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது.
- ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சுற்றுவட்டார கடலோர பகுதிகளில் 2 நாட்களாக அதிகாலையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை மாமல்லபுரம், தேவநேரி, வெண்புருஷம், கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, கடல் பகுதியில் அதிகப்படியான காற்று வீசியது.
கடலின் சீற்றமும் அதிகளவில் காணப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பெயரில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் வருவாய் துறையினர் மழை மற்றும் புயல் பாதுகாப்பு குறித்து கடலோர பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.