உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் திருநங்கைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

Published On 2022-07-09 12:08 IST   |   Update On 2022-07-09 12:08:00 IST
  • இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கியதோடு மருந்து மாத்திரைகளையும் வழங்கினர்.
  • மருத்துவ முகாமில் திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு சங்கம் மற்றும் பூந்தமல்லி தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு விடிவெள்ளி நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஜி தலைமை வகித்தார். பொருளாளர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில் தனியார் மருத்துவமனை மருத்துவர் மலர்மண்ணன் பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கியதோடு மருந்து மாத்திரைகளையும் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு சங்கத்தின் திட்ட மேலாளர் நாச்சியா உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News