உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்.

கொடுமுடி அருகே நடுரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2022-06-10 05:31 GMT   |   Update On 2022-06-10 05:31 GMT
  • அரசு ஆதார கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20.60 ரூபாய் நிர்ணயித்த போதிலும் கொள்முதல் மையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு கிலோ 14 ரூபாய் அளவிற்கு நெல்லை விற்பனை செய்கிறோம்.
  • சோளங்காபாளையம் நால் ரோட்டின் மத்தியில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் சாலையின் இருபுறங்களிலும் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்றது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோளங்காபாளையத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க கோரி இன்று காலை ஈரோடு-கரூர் பிரதான சாலையில் திடீரென நெல்லை கொட்டியும், டிராக்டரை நிறுத்தியும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் இந்த பகுதியில் மட்டும் சுமார் 700 ஏக்கரில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தது. ஆனால் மே மாதத்துடன் அவை அனைத்தும் மூடப்பட்டு விட்டது.

அரசு ஆதார கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20.60 ரூபாய் நிர்ணயித்த போதிலும் கொள்முதல் மையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு கிலோ 14 ரூபாய் அளவிற்கு நெல்லை விற்பனை செய்கிறோம். அதையும் வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சோளங்காபாளையம் நால் ரோட்டின் மத்தியில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் சாலையின் இருபுறங்களிலும் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News