உள்ளூர் செய்திகள்
பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி சோப்பு-'வாஷிங் பவுடர் தயாரிப்பு- 15 பேர் கைது
- போலி வாஷிங் பவுடர், சோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
சோழவரம் அடுத்த எடப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர், சோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம், சோப்புகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். போலி வாஷிங் பவுடர் தயாரித்து வந்த மேனேஜர் முகமது இப்ராஹிம், சூப்பர்வைசர் ரவி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 15பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.