உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published On 2023-02-27 09:14 IST   |   Update On 2023-02-27 09:14:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
  • இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறைவேற்றினார்.

Tags:    

Similar News