உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

நம்பியூர் பகுதியில் ஆடுகளை திருடிய என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் கைது

Published On 2023-10-08 04:25 GMT   |   Update On 2023-10-08 04:25 GMT
  • காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளை விற்பனை செய்தும் வருகிறார். தனது வீட்டின் முன் பகுதியில் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்து விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் ஆடுகள் குறித்து தகவல் இல்லை. ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இதேபோல் நம்பியூர் அருகே உள்ள சின்ன கோசணம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையல் கோபி பகுதியில் 3 வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கவின் (19), சிறுவலூர் ரஞ்சித்குமார் (21), கரட்டடிபாளையம் ஹரி பிரசாத் (20) என்பதும், அவர்கள் தனியார் கல்லூரியில் என்ஜனீயரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் 3 பேர் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அவர்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News