உள்ளூர் செய்திகள்

காதலியின் தோழியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட என்ஜினீயர் கைது

Published On 2022-07-20 12:54 IST   |   Update On 2022-07-20 12:54:00 IST
  • ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
  • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 27 வயது பெண் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதள பக்கத்தை பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த பெண் மனஉளைச்சல் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

பின்னர் சம்பவத்தன்று திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் கருங்குமாரன்பாளையத்தை சேர்ந்த நடேசனின் மகன் சக்திவேல் (வயது 27) என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது காதலித்த பெண் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு எப்போதும் அவினாசியை சேர்ந்த காதலியின் தோழியிடம் அதிகமாக பேசி வந்துள்ளார். இது குறித்து காதலிடம் கேட்டபோது எனக்கு உன்னை விட எனது தோழி தான் முக்கியம் என கூறினார். இதனால் தோழி மீது உள்ள ஆத்திரத்தில் இது போன்ற படத்தை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறினார். இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீசார் சக்திவேலை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News