உள்ளூர் செய்திகள்
லாரியை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்ட யானை.

ஆசனூர் அருகே இன்று காலை லாரியை வழி மறித்து கரும்பு சாப்பிட்ட யானை- போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-06-16 10:26 IST   |   Update On 2022-06-16 10:26:00 IST
  • சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக கரும்புகளை யானை சுவைத்தது.
  • கரும்பு ஏற்றி செல்லும் லாரிகள் கரும்புகளை சாலையில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை சாப்பிட யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரி ஒன்று சென்றது. லாரி ஆசனூர் அடுத்த காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒற்றை யானை கரும்பு லாரியை வழிமறித்து நிறுத்தியது.

பின்னர் லாரியில் இருந்த கரும்புகளை சுவைத்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக கரும்புகளை யானை சுவைத்தது. பின்னர் கிளீனர் லாரியின் மேல் ஏறி கரும்புகளை எடுத்து சாலை ஓரத்தில் வீசினார். பின்னர் யானை சாலை ஓரத்துக்கு சென்றது. இதையடுத்து கரும்பு லாரி மீண்டும் புறப்பட்டு சென்றது.

கரும்பு ஏற்றி செல்லும் லாரிகள் கரும்புகளை சாலையில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டு வந்தால் லாரி ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்தப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News