உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் மனுவை ஏற்றது தேர்தல் ஆணையம்- ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு நிராகரிப்பு

Published On 2023-02-08 13:12 IST   |   Update On 2023-02-08 15:24:00 IST
  • வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
  • 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் மதியம் 12.30 மணி வரை காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. வாபஸ் பெற போவதாக அறிவிக்கப்பட்ட அ.ம.மு.க. வேட்பாளர் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

Tags:    

Similar News