உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே மூதாட்டி பிணம்

Published On 2022-06-11 13:57 IST   |   Update On 2022-06-11 13:57:00 IST
  • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • பிணத்தை மீட்டு பார்த்தபோது அடையாளம் தெரியாத 70வயது மூதாட்டியின் உடல் என தெரியவந்தது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தை ஒட்டியுள்ள பக்கிங்காம் ஓரத்தில் உள்ள இறால் பண்ணை அருகில், பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது., போலீசார் பிணத்தை மீட்டு பார்த்தபோது அடையாளம் தெரியாத 70வயது மூதாட்டியின் உடல் என தெரியவந்தது. யார் இவர்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News