உள்ளூர் செய்திகள்

வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அரசு பஸ்களில் முன்பதிவு தினமும் 25 ஆயிரத்தை தாண்டியது

Published On 2023-05-15 14:55 IST   |   Update On 2023-05-15 14:55:00 IST
  • சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 வாரமாக அதிகரித்து வருகிறது
  • மே தொடக்கத்தில் அரசு பஸ்களில் முன்பதிவு தினமும் 10 ஆயிரம், 15 ஆயிரம் என இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 வாரமாக அதிகரித்து வருகிறது. வழக்கமான கோடை காலத்தை விட இந்த ஆண்டு பஸ் பயணம் அதிக அளவில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மே தொடக்கத்தில் அரசு பஸ்களில் முன்பதிவு தினமும் 10 ஆயிரம், 15 ஆயிரம் என இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் இந்த மாதம் இறுதிவரை நிரம்பி விட்டன. இதேபோல தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்பும் முன்பதிவு அதிகம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News