உள்ளூர் செய்திகள்
தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்
- சோழவரம் ஒன்றியம் தச்சூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது.
- 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் சோழவரம் ஒன்றியம் தச்சூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.