உள்ளூர் செய்திகள்
நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
- போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அதை மீறி போராட்டம் நடத்த திரண்டனர்.
சென்னை:
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரியும் கவர்னரை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அதை மீறி போராட்டம் நடத்த திரண்டனர்.
அவர்கள் அனைவரையும் சைதாப்பேட்டை சின்னமலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் தடையை மீறி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே போலீசார் தடுப்பு அமைத்து அவர்களை மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது ஏராளமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பெண்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.