உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்குவதில் தாமதம்

Published On 2022-11-02 10:57 IST   |   Update On 2022-11-02 10:57:00 IST
  • அரசு பள்ளிகளில் இதுவரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.
  • ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னை:

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது பெரும் சவாலாக உள்ளது. மிக குறைந்த அளவில் தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறுகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 1500 மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவசமாக நேரடி நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. கொரோனா காரணத்தால் இணைய வழியில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் கடந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது.

இந்த நிலையில் பள்ளிகளில் கடந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

ஆனால் அரசு பள்ளிகளில் இதுவரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் நீட் பயிற்சி குறித்து எந்த அறிவுறுத்தலையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கவில்லை. பயிற்சி எப்போது தொடங்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News